Thursday, September 1, 2016

PSORIASIS

         சமீபகாலமாக டாக்டர் என் பையன் கைல கால்ல தடிப்பா இருக்கு நிறைய சொரியறான் இது என்ன சொரியசிஸ்சா என்றும் ‘டாக்டர் தலையில் மீன் தோல் போல் செதில் செதிலா வருது சார் இது என்ன சொரியாசிஸ்சா’ என்று தோல் மருத்துவரின் படியேரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி கொண்டே போகிறது. சொரியாசிஸ் என்றால் என்ன, யாருக்கு வரும், எனென்ன பாதிப்புகள் உண்டாக்கும் என்பது பற்றிய சிறு குறிப்பே இது:-

        சொரியாசிஸ் என்றால் காளாஞ்சகம் (அ) செதில் உதிர் படை என சித்த மருத்துவத்தில் குறிப்பிடுவர். சொரியாசிஸ் மரபியல் காரணிகள், சுற்றுசூழல் காரணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி சீர்கேடு ஆகியவற்றால் ஏற்படுகிறது. இது ஒரு தொற்று நோய் அல்ல. இது முழங்கை, நகம், தலை மற்றும் முதுகு பகுதிகளில் அதிகமாக காணப்படும். இது ஆண் பெண் என்று இரு பாலரையும் பாதிக்கின்றது.

        இது சிவந்த அல்லது கருத்த பரு போல் தோன்றி உடலின் குறிப்பிட்ட பகுதியிலோ அல்லது உடல் முழுவதுமோ பரவி காணப்படும். இதில் அரிப்பு, சொரிந்தால் வெண்ணிற செதில்கள் வெளிப்பட்டு பின் சிறிது ரத்தம் கசியும். மேலும் தலையில் பொடுகு போன்றும் நகத்தில் சொத்தை போன்றும் தோன்றும். சொரியாசிசை ஆரம்ப நிலையிலே மருத்துவரின் ஆலோசனை பெற்று மருந்து  எடுத்துக்கொண்டால் எளிதில் கட்டுபடுத்திவிடலாம். இது நாட்பட்ட நிலையில் மூட்டுகளை பாதித்து காளாஞ்சக வாதமாக (psoriatic arthritis) மாறி மூட்டுகளில் வலி வீக்கம், மூட்டுகளின் அசைவு குறைதல், கோணலாகுதல் போன்றவை ஏற்படும்.

        காளாஞ்சகதிர்க்கு சித்த மருத்துவத்தில் சிவனர்வேம்பு குழி தைலம், வெட்பாலை தைலம், சிவனர்வேம்பு சூரணம், கந்தக ரசாயணம் போன்ற மருந்துகளும் காளாஞ்சக வாதத்திற்கு இரசகந்தி மெழுகு, வாத கேசரி தைலம் போன்ற மருந்துகள் நோயின் கடுமையை நன்றாக குறைக்கின்றது. இது போல் இன்னும் நிறைய மருந்துகள் உள்ளளன தேவையான மருந்துவத்தை செறியான முறையில் சித்த மருத்துவரின் ஆலோசனைக்கிணங்க எடுத்துக்கொண்டால் நோயின் வன்மையை கட்டுக்குள் வைக்கலாம்.
    
        குளிர் பிரதேசம், குளிர் காலம், மன அழுத்தம், குடி பழக்கம், புகை பிடித்தல் போன்றவை  நோயின் வீரியத்தை அதிகரிக்கும். இந்த நோய் பற்றி இன்னும் விளக்கம் அறிய கீழே குறிப்பிட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து தெளிந்து கொள்ளவும்.

-Dr.C.சதீஸ் B.S.M.S., MS(Clinical Pharmacology)(UK)

ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள - 9176115735